தேசியக்கொடியை தலைகீழாக ஏற்றிய மந்திரி

நாடு முழுவதும் நேற்று குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி கேரள மாநிலம் காசர்கோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விழாவில், கேரள துறைமுகங்கள், தொல்பொருள் மற்றும் அருங்காட்சியகத்துறை மந்திரி அகமது தேவர்கோவில் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

அப்போது தேசியக்கொடி தலைகீழாக ஏற்றப்பட்டு இருந்தது. இதை கண்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உடனடியாக தேசியக்கொடி கீழே இறக்கப்பட்டு, சரி செய்து மீண்டும் நேராக ஏற்றப்பட்டது.தொடர்ந்து அங்கு நடந்த போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை மந்திரி ஏற்று கொண்டார்.

இதற்கிடையில் தேசியக்கொடியை தலைகீழாக ஏற்றியது தொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.

இதையொட்டி தேசியக்கொடி தலைகீழாக கட்டப்பட்டு இருந்தது எப்படி? என்று உரிய விசாரணை நடத்த மாவட்ட நீதிபதி மற்றும் போலீஸ் சூப்பிரண்டுக்கு மந்திரி உத்தரவிட்டு உள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Comments are closed.