தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு மாணவர்களை உள்வாங்குவதற்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும் 15ஆம் திகதி ஆரம்பம்

தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்

2018ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் பிரகாரம், மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

ஐம்பது கற்கை நெறிகளுக்காக நான்காயிரத்து 253 பேர் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர். மாணவர்களை உள்வாங்குவதற்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும் 15ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

தகுதி பெற்றுள்ள விண்ணப்பதாரிகளுக்கான நேர்முக பரீட்சைக்குரிய கடிதங்கள் உரிய கல்வியியல் கல்லூரிகளினூடாக தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Comments are closed.