தைவானில் கடுமையான நிலநடுக்கம்

தைவான் நாட்டின் கிழக்கே ஹுவாலியன் கவுன்டி பகுதியில் இன்று அதிகாலை 12.43 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.  இது ரிக்டரில் 5.4 ஆக பதிவாகி உள்ளது.

இந்நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என சீன நிலநடுக்கவியல் நெட்வொர்க் மையம் தெரிவித்து உள்ளது.  இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் உடனடியாக வெளிவரவில்லை.

Comments are closed.