தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி

சர்வதேச ஆக்கி சம்மேளனம் சார்பில் முதலாவது 5 பேர் ஆக்கி போட்டி சுவிட்சர்லாந்தில் உள்ள லாசானே நகரில் நேற்று தொடங்கியது.

இதன் ஆண்கள் பிரிவில் இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 4-3 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்தை தோற்கடித்தது.அடுத்த ஆட்டத்தில் இந்திய அணி 2-2 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானுடன் டிரா கண்டது.

பெண்கள் பிரிவில் இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் 3-4 என்ற கோல் கணக்கில் உருகுவேயிடம்,இரண்டாவது ஆட்டத்தில் 1-3 என்ற கோல் கணக்கில் போலந்திடம் வீழ்ந்தது.

Comments are closed.