தொடருந்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

ரம்புக்கணையிலிருந்து கொழும்பு – கோட்டை நோக்கி புறப்பட தயாராகவிருந்த தொடருந்து ஒன்றிலிருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

அந்த சடலத்தின் கழுத்து பகுதியில் காயம் காணப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

ரம்புக்கணை தொடருந்து நிலையத்திலிருந்து இன்று அதிகாலை 5.25க்கு புறப்பட தயாராகவிருந்த தொடருந்தின் 3ஆம் வகுப்பு பெட்டியிலிருந்து 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

எனினும் சடலம் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்பதுடன், குறித்த நபர் தன்னைத்தானே மாய்த்துக் கொண்டாரா? என்பது தொடர்பில் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Comments are closed.