தொடருந்து ஊழியர்கள் மீண்டும் பணிப்புறக்கணிப்பில்

மீண்டும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தொடருந்து தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

கடமைக்கு சமுகமளிப்பதற்கு எரிபொருள் வழங்காததன் காரணமாக தாம் இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக குறித்த தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

மேற்படி காரணத்தை முன்வைத்துக்கு நேற்றுமுன்தினம் முதல் சில தொடருந்து தொழிற்சங்கத்தினர் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

எனினும், போக்குவரத்து அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து, நேற்று குறித்த தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டது.

Comments are closed.