தொடருந்து சேவைகள் இன்று முதல் மீள ஆரம்பம்

மாகாணங்களுக்குள் மாத்திரம் தொடருந்து சேவைகள் இன்று (25) முதல் மீள ஆரம்பமாகின்றன.

இதற்கமைய 133 தொடருந்து சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் தொடருந்து திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

பருவச் சீட்டினைக் கொண்டவர்களுக்கு மாத்திரம் இன்று (25)  முதல் தொடருந்துகளில் பயணிக்க முடியும்.

இதேவேளை, பருவச் சீட்டுத் தொடர்பில் பரிசோதனைகளை மேற்கொள்வதற்காகத் தொடருந்து நிலையங்களில் காவல்துறையினர் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

அத்துடன் அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் மாகாணங்களுக்கு இடையிலான தொடருந்து மற்றும் பேருந்து சேவைகள் என்பன முன்னெடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.