தொடருந்து சேவைகள் ரத்து

சில தொடருந்து மார்க்கங்களின் 14 தொடருந்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

கட்டுப்பாட்டாளர்கள் பலருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளதால் இவ்வாறு தொடருந்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, பிரதான தொடருந்து மார்க்கத்தின் 6 தொடருந்து சேவைகளும், களனி வெளி மற்றும் கரையோர தொடருந்து மார்க்கங்களின் தலா 2 தொடருந்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், புத்தளம் தொடருந்து மார்க்கத்தின் 3 தொடருந்து சேவைகளும், வடக்கிற்கான ஒரு தொடருந்து சேவையும் இவ்வாறு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

 

Comments are closed.