தொடருந்து சேவைகள் வழமைக்கு

தொடருந்து நிலைய அதிபர்களின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டதை அடுத்து, இன்று(15) முதல் தொடருந்து சேவைகள் வழமைபோல இடம்பெறுவதாக தொடருந்து திணைக்கள பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டதை அடுத்து, தொடருந்து நிலைய அதிபர்கள் கடமைக்கு சமுகமளித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கத்தின் உபதலைவரை பதவியிலிருந்து நீக்க தொடருந்து திணைக்கள பொதுமுகாமையாளர் நடவடிக்கை எடுத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடருந்து நிலை அதிபர்கள் சங்கம் நேற்று திடீர் பணிப்புறக்கணிக்கை மேற்கொண்டது.

இந்த நிலையில், பதவி நீக்கப்பட்ட தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கத்தின் உபதலைவரை மீண்டும் அந்தப் பதவியில் அமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டதை அடுத்து, தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் போராட்டத்தைக் கைவிட்டது.

Comments are closed.