தொடருந்து மோதி ஒரே குடும்பத்தின் மூவர் பலி

வட்டவளை – ரொசல்ல பகுதியில் தொடருந்து மோதி 3 பேர் பலியாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ரொசல்ல தொடருந்து நிலையத்துக்கு அருகில் இன்று முற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய் மற்றும் மகன் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் பலியானவர்கள் மஸ்கெலியா – சாமிமலை பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் நாவலப்பிட்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

 

Comments are closed.