நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பாகிஸ்தான் ராணுவ வீரர் பலி

பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணம் ஈரான் நாட்டின் எல்லை அருகே அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் செயல்பட்டு வருகிறது.

இந்த குழுக்கள் பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிராக தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த கிளர்ச்சியாளர்கள் குழுக்களில் சிலர் ஈரான் நாட்டிலும் பதுங்கி உள்ளனர்.

இந்நிலையில், பலூசிஸ்தான் மாகாணத்தில் சுபக் பகுதியில் ஈரான் நாட்டின் எல்லை அருகே பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்த பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மீது நேற்று திடீர் தாக்குதல் நடைபெற்றது.

ஈரான் நாட்டில் இருந்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 1 பாகிஸ்தான் ராணுவ வீரர் உயிரிழந்தார். மேலும், ஒரு வீரர் படுகாயமடைந்தார். இந்த தாக்குதலில் பலூசிஸ்தான் கிளர்ச்சியாளர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்று பாகிஸ்தான் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.