நடிகர் சிம்பு மருத்துவமனையில் அனுமதி

பிரபல நடிகர் சிம்பு சற்றுமுன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகர் சிலம்பரசனுக்கு இன்று திடீரென காய்ச்சல் ஏற்படுவதாகவும் இதனை அடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

கொரோனா தொற்று இல்லை என்றாலும் காய்ச்சல் தீவிரமாக இருப்பதால் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் இன்று இரவு அல்லது நாளை காலை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சிம்பு நடித்த ’மாநாடு’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றவர்களில் அவர் தற்போது ’வெந்து தணிந்தது காடு’ என்ற படத்தின் படப்பிடிப்பில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Comments are closed.