நல்லூரில் மாபெரும் போராட்டம்!!
சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி இன்றைய தினம் காலை யாழில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்று எடுக்கப்பட்டுள்ளது.
கொல்லாதே கொல்லாதே அரசியல் கைதிகளை கொல்லாதே, விடுதலை செய் விடுதலை செய் அரசியல் கைதிகளை விடுதலை செய் , அரசியல் கைதிகளும் மனிதர்களே, சிங்களவர்களுக்கு ஒரு நீதி தமிழர்களுக்கு ஒரு நீதியா ? போன்ற பல கோஷங்களை போராட்டத்தில் கலந்து கொண்டோர் எழுப்பினர். இதில் கைதிகளின் உறவினர்கள், மதத் தலைவர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களில் தவிசாளர்கள், உறுப்பினர்கள் ,பொதுமக்கள் போன்ற பலர் கலந்து கொண்டனர்.