நவகமுவ வைத்தியசாலை தயார் நிலையில்

அடுத்த மாதம் க.பொ.த சாதாரணத் தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களில் திடீரென எவருக்காவது கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால், அவர்களை நவகமுவ வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதிப் யசரத்ன தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தொற்றுக்குள்ளாகும் மாணவர்கள் வைத்தியசாலையிலேயே பரீட்சை எழுதுவதற்கு தேவையான நடவடிக்கைகளை செய்துக்கொடுப்பதற்கும் எதிர்பார்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments are closed.