நாடளாவிய ரீதியில் 70 மாணவர்களுக்கு கொரோனா தொற்று: ஆசிரியர் சங்கம் தெரிவிப்பு

நாடளாவிய ரீதியில் 70 மாணவர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு தொற்றுக்குள்ளான மாணவர்களில் பெரும்பாலானோர் காலி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் மாவட்ட சுகாதார திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கையில்,

காலி மாவட்டத்தில் 26 பாடசாலைகளைச் சேர்ந்த 43 மாணவர்கள் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்தனர்.

எனவே மாணவர்களுக்கு தொற்று ஏற்படாமல் இருக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

எழுந்தமானமாக அன்டிஜன் பரிசோதனைகளை மேற்கொள்ளல் மற்றும் இலவசமாக முககவசங்களை வழங்குதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

காலி மாவட்டத்தை தவிர வென்னப்புவ, பசற, அநுராதபுரம், நிக்கரவெட்டிய, ஒபநாயக்க, மற்றும் குருநாகல் ஆகிய பகுதிகளில் மாணவர்கள் தொற்றால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

Comments are closed.