நாடு திரும்ப முடியாமல் இருந்த 248 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் சென்று நாடு திரும்ப முடியாமல் இருந்த 248 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் வேலைத்திட்டத்தின் கீழ், இன்று(06) காலை 8.30 மணி வரையான கடந்த 24 மணிநேரத்துக்குள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

அத்துடன், 513 இலங்கையர்கள் தொழில்புரிவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளை நோக்கி பயணமாகியுள்ளனர் எனவும் விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டை வந்தடைந்தவர்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றிருந்த பணிப்பெண்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Comments are closed.