நாடு முழுவதும் உள்ள 120 பாடசாலைகளில் சுகாதார அறைகளை நிர்மாணிக்கும் அமெரிக்கா

நாடு முழுவதும் உள்ள 120 பாடசாலைகளில் அமெரிக்கா சுகாதார அறைகளை அமைத்து வருகின்றது.

கொவிட்-19 தொற்றுக்கு எதிரான அடிப்படை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உறுதிபடுத்துவதற்கான கல்வி அமைச்சின் பரிந்துரைகளை குறித்த சுகாதார அறைகள் ஊக்கப்படுத்துவதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படுக்கைகள், முதலுதவி உபகரணங்கள, நகர்த்தக்கூடிய மறைப்பு திரைகள், மற்றும் நீர் விநியோகிப்பான்கள் என்பன குறித்த அறைகளில் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவையேற்படுகின்ற போது மாணவர்களுக்கு சுகாதார சார் கவனிப்பை மேற்கொள்ளும் நோக்கில் இவை அமைக்கப்படுகின்றன.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, அநுராதபுரம், கண்டி, மொணராகலை மற்றும் கம்பஹா ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள இந்த சுகாதார அறைகள் கொவிட்-19 பரவல் நிறைவடைந்த பின்னரும் பயன்பாட்டில் இருக்குமென குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Comments are closed.