நாடு முழுவதும் விசேட பொலிஸ் நடவடிக்கை
நாடு முழுவதும் இன்று முதல் விசேட பொலிஸ் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தல் செயற்பாட்டினை மீறி செயற்படும் நபர்களை கைது செய்யும் வகையில் இன்று முதல் விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அனுமதியின்றி ஏற்பாடு செய்யப்படும் விருந்து, குழுக்களாக கூடி செய்யும் செயற்பாடுகளை சுற்றி வளைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுவோரை கைது செய்யும் நடவடிக்கை கடந்த ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்ட பலருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 24 மணித்தியாலத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது