நாட்டின் சில பகுதிகளில் மழையுடனான வானிலை

இரத்தினபுரி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இன்றையதினம் இடைக்கிடையே மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடமேல் மாகாணத்திலும் கம்பஹா, கொழும்பு, கண்டி, நுவரெலியா மற்றும் கேகாலை மாவட்டங்களின் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஓரளவு மழை பெய்யக்கூடும்.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களிலும் இன்று பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை பெய்யக் கூடும் என வளிட அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

Comments are closed.