நாட்டின் சில பகுதிகளில் இன்றைய தினம் 100 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும்: வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டின் சில பகுதிகளில் இன்றைய தினம் 100 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்கூரியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது

இதன்படி, மத்திய, சப்ரகமுவ, வட மேல் மற்றும் மேல் மாகாணங்களில், இவ்வாறு 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வடக்கு, கிழக்கு, வட மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழைபெய்யக் கூடும் என எதிர்வுகூரப்பட்டுள்ளது.

மேலும், நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் வேளைகளில் மழைபெய்யக் கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இடியுடன் கூடிய மழைபெய்யும் சந்தர்ப்பங்களில், தற்காலிகமாக ஏற்படும் காற்று மற்றும் மின்னல் தாக்கங்களில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு, உரிய நடவடிக்கைளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Comments are closed.