நாட்டின் தேவைகளுக்கு ஏற்ப பாடத்திட்டங்கள் புதுப்பிக்கப்படும்: கல்வி அமைச்சர்..!

நாட்டின் பொருளாதார மற்றும் வேலைவாய்ப்பு தேவைகளுக்கு ஏற்ப பாடத்திட்டங்கள் மாற்றங்களுக்கு உட்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

கல்வி அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், நாட்டின் தேவைகளுக்கு ஏற்ப தற்போதைய பாடத்திட்டங்கள் அமையவில்லை என குறிப்பிட்டார்.

எனவே, அவற்றை மாற்றுவது குறித்து எதிர்காலத்தில் அரசாங்கம் அறிமுகப்படுத்தும் கல்வி சீர்திருத்தங்களில் கவனத்திற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கூறினார்.

Comments are closed.