நாட்டின் பல பாகங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை: வளிமண்டலவியல் திணைக்களம்
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பலத்த மழை பெய்யலாம் என, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வடக்கு, கிழக்கு, வட மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.