நாட்டின் முதலாவது சுதந்திர வீதி நூலகம் திறந்து வைக்கப்பட்டது

இரு நாடுகளின் அனுசரணையின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் நாட்டின் முதலாவது சுதந்திர வீதி நூலகம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு – 07 இல் அமைந்துள்ள கொழும்பு வர்த்தக வளாகத்திற்கு பிரவேசிக்கும் நுழைவாயிலுக்கு அருகில் இந்த நூலகம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

2.3 மில்லியன் ரூபா பாகிஸ்தானின் நிதி உதவியின் கீழ் குறித்த நூலகம் நிர்மாணிக்கப்பட்டதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

24 மணிநேரமும் இந்த நூலகத்தின் ஊடாக பயன்பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொறுப்பாளர் மற்றும் பாதுகாவலர் இன்றி தாணியக்க முறையில் இந்த நூலகம் செயற்படுத்தப்படுகிறது.

எவ்வாறாயினும், குறித்த நூலகத்திலிருந்து புத்தகங்களை வெளியில் கொண்டுச் செல்ல அனுமதியில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Comments are closed.