நாட்டின் 25 மாவட்டங்களிலும் 25 விசேட பரீட்சை மத்தியநிலையங்களை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை: பரீட்சைகள் திணைக்களம்

நாட்டின் 25 மாவட்டங்களிலும் 25 விசேட பரீட்சை மத்தியநிலையங்களை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியில் கல்விப்பொதுத்தராதர சாதாரண பரீட்சை நடைபெறவுள்ளது.

இந் நிலையில் மாணவர்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மற்றும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் குறித்த விசேட பரீட்சை மத்திய நிலையங்களில் உள்வாங்கப்படுவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை விசேட பரீட்சை நிலையங்கள் அமைப்பது தொடர்பில் மாகாண கல்வி பணிப்பாளர்களுடன் கலந்துரையாடி தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Comments are closed.