நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 69,348 ஆக அதிகரிப்பு!!

நாட்டில் நேற்றைய தினம் 772 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானமையை அடுத்து தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 69,348 ஆக அதிகரித்துள்ளது.

அவர்கள் அனைவரும் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டார்.

இதேவேளை, நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 807 பேர் குணமடைந்துள்ளதாக தொற்று நோய் தடுப்புப் பிரிவு விடுத்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 63,401 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் தொற்றுறுதியான 5,591 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் மேலும் 21 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று 403 பேருக்கு கொவிட்-19 பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

அவர்களில் 21 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய வவுனியாவில் 8 பேருக்கும் கிளிநொச்சியில் 2 பேருக்கும் மன்னாரில் 11 பேருக்கும் தொற்றுறுதியாகியுள்ளது.

Comments are closed.