நாட்டில் கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 43,299 ஆக அதிகரிப்பு!

நாட்டில் கொவிட் 19 தொற்றுக்குள்ளான 597 பேர் நேற்று(31) அடையாளம் காணப்பட்டுள்ளதையடுத்து, தொற்றாளர்களின்  எண்ணிக்கை 43 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இதற்கமைய, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 43,299 ஆக அதிகரித்துள்ளதாக, சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், கொரோனா தொற்றுடைய மேலும் 7,776 பேர் தொடர்ந்து வைத்திய கண்காணிப்பின் கீழ் உள்ள நிலையில், 35,329 பேர் குணமடைந்துள்ளனர்.

Comments are closed.