நாவலபிட்டிய தமிழ் வித்தியாலயத்தில் 15 மாணவர்களுக்கு கொவிட் தொற்று உறுதி!
நாவலபிட்டிய – வேஸ்ஹோல்ட் தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 15 மாணவர்களுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2ம் திகதி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டிருந்தன.
இவ்வாறு நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் அறிக்கை நேற்றிரவு கிடைத்ததாகவும் இதிலேயே மாணவர்களுக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.
அத்துடன், பாடசாலைஆசிரியர் ஒருவருக்கும் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.