‘நிபந்தனைகளை பூர்த்தி செய்த உதவி ஆசியரியர்கள் திங்கட்கிழமைகளில் சந்திக்கலாம்’

பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு நியமனங்கள் வழங்கப்பட்ட ஆசிரிய உதவியாளர்கள், அனைத்து நிபந்தனைகளை பூர்த்தி செய்த பின்னரும், ஆசிரிய சேவைக்கு உள்வாங்கப்படாமல் இருப்பார்கள் எனில், அது குறித்து அவர்கள் வாரம் முதல், தனது கவனத்துக்குக் கொண்டு வரும்படி கோரப்பட்டுள்ளனர்.

ஊவா மாகாண தமிழ்க் கல்வி அமைச்சின் செயலாளர் ஆர். எம். டி. ரட்ணாயக்க, பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமாரக்க, அனுப்பியுள்ள கடிதமொன்றிலேயே, இது தொடர்பாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார், ஆசிரிய உதவியாளர்களில் பெரும்பலானோர், விதிக்கப்பட்ட நிபந்தனைகள் பலவற்றை பூர்த்தி செய்திருந்த போதிலும், அவர்கள் ஆசிரிய சேவைக்கு உள்வாங்கப்படாதுள்ளனர் என்றும் இது குறித்து கூடிய கவனம் செழுத்தி, அவ் ஆசிரிய உதவியாளர்களை, ஆசிரிய சேவைக்கு உள்வாங்கும்படி கோரி. ஊவா மாகாண தமிழ்க கல்வி அமைச்சின் செயலாளருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்திருந்தார்.

அக்கோரிக்கைக்கமையவே, மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமாருக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.

அக்கடிதத்தில், பெருந்தோட்டப் பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய, ஆசிரிய உதவியாளர்கள் பலர் நியமிக்கப்பட்டிருந்தனர் என்றும் நியமனங்களை பெற்று, 5 வருடங்களுக்குள் ஆசிரிய பயிற்சி மற்றும் பட்டங்கள் முழுமைப்படுத்தப்பட்டிருக்க வேண்டுமென்றும், அதன் பின்னரே ஆசிரிய சேவைக்கு அவர்கள் உள்வாங்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்ததாக அவர் கூறினார்.

அவ்வகையில், நிபந்தனைகளைப் பூர்த்தி செய்த ஆசிரிய உதவியாளர்கள், பட்டியலை ஊவா மாகாண அரச சேவை ஆணைக்குழுவுக்கு அனுப்பியுள்ளதாகவும் விதிக்கப்பட்ட நிபந்தனைகள் அனைத்தும் பூர்த்தி செய்த ஆசிரிய உதவியாளர்கள் இருப்பின், அவர்கள், வாரத்தில் முதல் நாளான திங்கட்கிழமைகளில், தன்னைச் சந்தித்து, பிரச்சினைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments are closed.