நீராடச் சென்ற இருவர் பலி

துங்கலப்பிட்டிய – கெபுனுகொட கடலில் நீராடச் சென்ற இருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

17 மற்றும் 23 வயதுகளையுடைய இளைஞர்கள் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இவர்களுடன் சென்ற மற்றைய நபர் கடலில் மூழ்கியுள்ளதாகவும் அவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Comments are closed.