நீரில் மூழ்கி ஒருவர் பலி

பேராதனை – நில்லம்ப ஓயாவில் நீராடச் சென்ற 5 பேர் பேரில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தின்போது, நீரில் மூழ்கிய பெண் ஒருவரும் சிறுவனொருவனும் காணாமல் போயுள்ளதுடன், மேலும் இருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில், சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் அனைவரும் கண்டியைச் சேர்ந்தவர்கள் என காவற்துறையினர் தெரிவித்தனர்.

இந்நிலையில், காணாமல்போனவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Comments are closed.