நீரில் மூழ்கி பலியான 5 வயது சிறுமி

பொலன்னறுவை இஸட் டீ கால்வாயில் நீராடச் சென்ற 5 வயது சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை குறித்த சிறுமி கயிற்றின் உதவியுடன் ஆற்றில் நீராடிக்கொண்டிருந்த வேளையில் கயிறு கைநழுவியதன் காரணமாக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

நீரில் அடித்துச்சென்ற சிறுமியை பிரதேசவாசிகள் காப்பாற்றி வைத்தியசாலையில் அனுமதிக்கும் வேளையிலும் அவர் உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.