நீரோடையிலிருந்து சிறுவன் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம் – சங்கானை தேவாலய வீதி பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுவன் நீரோடையில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

நிரோஜன் ஸ்டீபன் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்ததாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

நேற்று(10) மதியத்திலிருந்து குறித்த சிறுவனைக் காணவில்லையென உறவினர்கள் தெரிவித்ததையடுத்து பிரதேச மக்கள் சிறுவனைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இரவு 9.30 மணியளவில் சிறுவன் நீரோடையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மானிப்பாய் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

Comments are closed.