நீர்கொழும்பு கடற்பகுதியில் 60 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் மீட்பு!

நீர்கொழும்பு கடற்பகுதியில் ஆழ் கடல் மீன்பிடிப் படகொன்றில் இருந்து பாரியளவான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த ஆழ் கடல் மீன்பிடிப் படகிலிருந்து 100 கிலோகிராம் ஐஸ் போதைப் பொருள் மற்றும் 80 கிலோ கிராம் ஹஷிஸ் போதைப்பொருள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.

மேலும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதி 60 கோடி ரூபாவுக்கு அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Comments are closed.