நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள 16 தமிழ்ப் பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்த கல்வி அமைச்சு நடவடிக்கை

நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள 16 தமிழ்ப் பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்த கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த விடயத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயம், ஹைலண்ட்ஸ் கல்லூரி, பொஸ்கோ கல்லூரி, தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயம், ஹோல்புரூக் தமிழ் மகா வித்தியாலயம், பொகவந்தலாவை சென் மேரிஸ் கல்லூரி ஆகிய பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்படவுள்ளன.

அத்துடன், நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயம், மஸ்கெலியா சென் ஜோசப் கல்லூரி, ஹார்ன்சி கல்லூரி, புளூம்பீல்ட் கல்லூரி, ராகலை தமிழ் மகா வித்தியாலயம், அல் மின்ஹாஜ் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்படவுள்ளன.

மேலும், பூண்டுலோயா தமிழ் மகா வித்தியாலயம், ஹொலி ட்ரினிட்டி தமிழ் மகா வித்தியாலயம், மெதடிஸ்ட் கல்லூரி, மராயா தமிழ் மகா வித்தியாலயம், ஆகிய பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்படவுள்ளதாக, அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மலையக மாணவர்களின் கல்வியை வளப்படுத்துவதற்காக, அதிக அளவிலான வளப் பகிர்வு, மற்றும் தேசிய செயற்றிட்டங்களை பாடசாலைகளுக்கு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும், இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.