நேற்று கொவிட் தொற்றாளர்களில் அதிகமானோர் கொழும்பு மாவட்டத்தில் பதிவு

நாட்டில் நேற்று கொவிட்-19 தொற்றுறுதியான, 1,716 பேரில், அதிகமானவர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.

கொவிட்-19 பரவல் கட்டுப்பாட்டு தேசிய செயற்பாட்டு மையத்தின் நாளாந்த அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தில் 375 பேருக்கு நேற்று தொற்றுறுதியாகியுள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் 247 பேருக்கும், களுத்துறை மாவட்டத்தில் 158 பேருக்கும், காலி மாவட்டத்தில் 138 பேருக்கும், குருணாகல் மாவட்டத்தில் 108 பேருக்கும், கண்டி மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் தலா 84 பேருக்கும் தொற்றுறுதியாகி உள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் 82 பேருக்கும், மாத்தறை மாவட்டத்தில் 70 பேருக்கும், மொனராகலை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் தலா 56 பேருக்கும் தொற்றுறுதியாகி உள்ளது.

அனுராதபுரம் மாவட்டத்தில் 45 பேருக்கும், புத்தளம் மாவட்டத்தில் 33 பேருக்கும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 24 பேருக்கும், பொலன்னறுவை மாவட்டத்தில் 19 பேருக்கும், அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 15 பேருக்கும், பதுளை மாவட்டத்தில் 12 பேருக்கும், மட்டக்களப்பு மற்றும் மன்னார் மாவட்டங்களில் தலா 09 பேருக்கும் தொற்றுறுதியாகியுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் 07 பேருக்கும், அம்பாறை மாவட்டத்தில் 05 பேருக்கும், கேகாலை மாவட்டத்தில் 04 பேருக்கும், வவுனியா மாவட்டத்தில் 02 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவருக்கும் தொற்றுறுதியாகியுள்ளது.

Comments are closed.