நைஜீரியாவில் பாடசாலை மாணவிகள் 300 பேரை கடத்திச்சென்ற பயங்கரவாத கும்பல்!!

நைஜீரியாவில் பாடசாலை மாணவிகள் 300 இற்கும் மேற்பட்டோரை பயங்கரவாதிகள் கடத்திச்சென்றுள்ளதாக சம்ஃபரா மாகாண கவர்னரின் செய்தித்தொடர்பாளர் ஜிலானி பப்பா உறுதி செய்துள்ளார்.

நைஜீரியாவில் அல்கொய்தா, ஐ.எஸ், பண்டிட்ஸ், போகோ ஹராம் உட்பட பல்வேறு பயங்கரவாத குழுக்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

இந்த பயங்கரவாத குழுக்களை அழிக்கும் நடவடிக்கையில் அந்நாட்டு பாதுகாப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த மோதலில் பொதுமக்கள், பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகள் என ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையில், பயங்கரவாதிகள் அவ்வப்போது பாடசாலைகளுக்குள் நுழைந்து அங்கு கல்வி பயின்று வரும் மாணவமாணவிகளை கடத்தி சென்று அவர்களை பயங்கரவாத செயல்களுக்கும், பணைய கைதிகளாகவும் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அந்நாட்டின் வடகிழக்கு பகுதியின் சம்ஃபரா மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் பயிலும் மாணவிகள் தங்குவதற்கான விடுதி பாடசாலைக்கு அருகே அமைந்துள்ளது.

அந்த விடுதிக்குள் திடீரென ஆயுதங்களுடன் நுழைந்த பண்டிட்ஸ் பயங்கரவாத குழுவினர் அங்கு தங்கியிருந்த 300 இற்கும் மேற்பட்ட மாணவிகளை கடத்திச்சென்றுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.