நோவக் ஜோகோவிச் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள்  ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற ரவுண்டு ஆப் 32 சுற்றில் நம்பர் 1 வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் பிரான்சை சேர்ந்த மோன்பில்ஸ் உடன் மோதினார்.

தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய ஜோகோவிச் 6-3 , 6-2 என்ற நேர் செட்கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இவர் அடுத்த சுற்றில் தரவரசையில் 78-வாத்து இடத்தில் இருக்கும் இங்கிலாந்து  நாட்டை சேர்ந்த ஆண்டி முர்ரே உடன் நாளை பலப்பரீட்சை நடத்துகிறார்.

அதே போல் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற காலிறுதிக்கு முந்தய சுற்றில் இங்கிலாந்து நாட்டின் முன்னணி வீராங்கனையும் அமெரிக்க ஓபன் சாம்பியனுமான எம்மா ரடுகானு 2-6 , 6-2, 4-6 என்ற கணக்கில் உக்ரைன் வீராங்கனையிடம் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

Comments are closed.