படகு கவிழ்ந்து விபத்து: 160 பேர் பலி

மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோவில் ஒன்பது படகுகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட நிலையில், காங்கோ ஆற்றில் சென்று கொண்டிருந்தன. படகுகளில் ௨௦௦க்கும் அதிகமானோர் பயணம் செய்தனர்.வடக்கு மங்கலா மாகாணம் பம்பா நகருக்கு அருகில் வந்த போது, எதிர்பாராதவிதமாக படகுகள் கவிழ்ந்தன. இதில் படகு களில் பயணம் செய்த ௨௦௦க்கும் அதிகமானோரும் நீரில் முழ்கினர். தகவல் அறிந்து வந்த மீட்புக் குழுவினர் மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த 40 பேரை உயிருடன் மீட்டனர்.மேலும்   உடல்களை மீட்புக் குழுவினர் மீட்டுள்ளனர். 1௦௦க்கும் அதிகமானோரின் நிலைமை தெரியவில்லை. அவர்கள் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடக்கிறது.

Comments are closed.