பதுங்கு குழி மீது பெட்ரோல் குண்டு வீசிய பர்தா அணிந்த பெண்

ஜம்மு காஷ்மீரின் சோபூரில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை பதுங்கு குழி மீது பர்தா அணிந்த பெண் ஒருவர் நேற்று இரவு பெட்ரோல் குண்டு வீசினார்.  இது குறித்த சிசிடிவி காட்சியும் வெளியாகி உள்ளது.

வீடியோவில் மக்கள் சாலையில் நடந்து சென்று கொண்டு இருக்கிறார்கள் . பர்தா அணிந்த பெண் ஒருவர் அந்த வழியாக செல்கிறார். அந்தப் பெண் கையில் ஒரு பையை வைத்து இருக்கிறார். அதை அவர் பதுங்கு குழிக்குள் திடீரென வீசிவிட்டு அங்கிருந்து ஓடி விடுகிறார். பதுங்குக் குழி தாக்கப்பட்டதை அடுத்து, அங்கு தீ விபத்து ஏற்பட்டதையும், பணியாளர்கள் தண்ணீரை ஊற்றி அணைக்க முயற்சிப்பதையும் காணமுடிகிறது. இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் கூறப்பட்டுள்ளது.

Comments are closed.