பதுளையில் உயர்ந்து வரும் டெங்கு

பதுளை பொது சுகாதார பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மாணவர்கள் உள்பட மூவர் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளனர்.

மேலும் தற்போது வரையில் 261 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக பதுளை பொது சுகாதார சேவை பணிப்பகம் தெரிவித்துள்ளது. கடந்த இரு தினங்களில் பதுளையில் 450 கட்டடத் தொகுதிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

அவற்றில் அரச உத்தியோத்தர்களின் அரச வீடுகள், அரச நிறுவனங்கள் உளப்பட 25 இடங்கள் டெங்கு நுளம்புகள் பரவும் இடமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 261 நபர்களுக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.