பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் நாடுகளின் பட்டியலில் கியூபா…

பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் நாடுகளின் பட்டியலில் கியூபாவை இணைப்பது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்கா மற்றும் கியூபா நாடுகளுக்கு இடையில் 50 ஆண்டுகளாக நிலவிவந்த முறுகல் நிலை, அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் ஆட்சிக் காலத்தில் மறுசீரமைக்கப்பட்டது.

இதன்படி, அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா, கியூபா மீதான கட்டுப்பாடுகளை தளர்த்தியதுடன், கியூபாவுக்கு விஜயம் செய்த முதல் அமெரிக்க ஜனாதிபதி எனும் பெருமையையும் பெற்றிருந்தார்.

எனினும், தற்போது அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்கவுள்ள நிலையில், டொனால்ட் ட்ரம்ப் இவ்வாறான தீர்மானத்தை எடுத்துள்ளமை விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.