பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய நபர் கைது

ஜம்மு-காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பூஞ்ச் மாவட்டத்தில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவத்தினர் 5 பேர் வீர மரணமடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து காஷ்மீரில் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.

இந்நிலையில், ஜம்முவின் பஹலின் மண்டல் பகுதியில் பாதுகாப்பு படையினர் இன்று அதிரடி சோதனை நடத்தினர். அந்த சோதனையில் பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய நபர் கைது செய்யப்பட்டார்.

கடந்த 2-ம் தேதி பஹலின் மண்டல் பகுதியில் டிரோன் மூலம் ஏகே 47 ரக துப்பாக்கி, தோட்டாக்கள் உள்ளிட்ட ஆயுதங்களை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் விசாரணை நடத்தி வந்த பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளுக்கு ஆயுத விநியோகம் செய்ய முயற்சித்த நபரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரிடம் பாதுகாப்புபடையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.