பரிசோதனைக்கு ஒத்துழையுங்கள்: பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவிப்பு!

மேல் மாகாணத்தில் மாத்திரம் முன்னெடுக்கப்பட்ட ரெபிட் என்டிஜன் பரிசோதனையை இனிவரும் நாட்களில் நாட்டின் பல்வேறு இடங்களில் முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக, பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, குறிப்பிட்ட சில இடங்களில் இன்று முதல் எழுமாறாக சிலரை தெரிவுசெய்து, ரெபிட் என்டிஜன் பரிசோதனையை முன்னெடுக்க திட்மிட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், பொதுமக்கள் இதற்கு தங்களது ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Comments are closed.