பரீட்சைக்குத் தோற்றாவிடின் மருத்துவ சபையில் இடமில்லை

உயர்தரப் பரீட்சையில் 3 பாடங்களிலும் சித்தி பெறாத மற்றும் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றாத எவரையும் வைத்தியராக, இலங்கை  மருத்துவ சபையில் பதிவு செய்ய முடியாதென, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, உயர்தரப் பரீட்சையில் உரிய தகுதியற்ற மாணவர்கள், வௌிநாடுகளில் மருத்துவ பட்டப்படிப்பை நிறைவு செய்தாலும் அவர்கள் இலங்கை மருத்துவ சபையில் பதிவுசெய்யப்படமாட்டார்கள் என சங்கம் தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சு நிறைவேற்றியுள்ள புதிய சட்டத்துக்கு அமைய,இலங்கையில் வைத்தியராக பணியாற்ற குறைந்தது உயர்தரப் பரீட்சையில் விஞ்ஞானப் பிரிவில்  2C மற்றும் S  சித்தியைப் பெற்றிருப்பது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.