பரீட்சை அனுமதிப்பத்திர விநியோகம் ஆரம்பம்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.கொழும்பு மற்றும் ஶ்ரீஜயவர்தனபுர கல்வி வலயங்களின் பாடசாலை அதிபர்கள் இன்று (17)  பரீட்சைகள் திணைக்களத்துக்கு வருகை தந்து அனுமதிப்பத்திரங்களை பெற்றுக் கொள்ள முடியும்.

இதனை, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி.பூஜித தெரிவித்துள்ளார்.

இதேநேரம், தனியார் பரீட்சார்த்திகளுக்கான அனுமதிப்பத்திரங்களும் இன்று தபால் மூலம் அனுப்பப்படவுள்ளன.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை எதிர்வரும் முதலாம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை 4,513 மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளது. இம்முறை பரீட்சையில் 622,352 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.

Comments are closed.