பரீட்சை பெறுபேறுகள் அனுப்பி வைப்பு

அரச பொது நிர்வாக சேவையில் இணைத்துக் கொள்வதற்கான போட்டி பரீட்சையின் பெறுபேறுகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அரச சேவை ஆணைக்குழுவிற்கு பரீட்சையின் பெறுபேறுகள்  அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, தெரிவுகள் இடம்பெற்ற பின்னர் பரீட்சை பெறுபேறுகள் பரீட்சார்த்திகளுக்கு அனுப்பி வைக்கவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சனத் பீ. பூஜித தெரிவித்துள்ளார்.

அரச பொது நிர்வாக சேவையில் இணைத்துக் கொள்வதற்கான போட்டி பரீட்சை கடந்த வருடம் பெப்ரவரி மாதம் நடத்தப்பட்டது.

Comments are closed.