பருத்தித்துறை வீதிக்கு அருகில் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் – பொன்னாலை, பருத்தித்துறை வீதியோரமாக இன்று அதிகாலை சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் முகத்தில் காயங்களுடனும், இரத்தக் கரையுடனும் காணப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

பொன்னாலை பருத்தித்துறை வீதியில் பொன்னாலைக்கும் திருவடிநிலைப் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியிலேயே சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சடலத்திற்கு அருகில் உந்துருளியொன்றும் காணப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்நிலையில், இந்த மரணம் விபத்தா? அல்லது கொலையா? என்ற கோணத்தில் இளவாலை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Comments are closed.