பறவைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்..!

வனாத்தவில்லு – எலுவான்குளம் – ரால்மடுவ வயல்நிலப் பகுதியில் 150 இற்கும் அதிகமான பறவைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

நேற்றைய தினம் கிடைத்த தகவலுக்கு அமைய, வனஜீவராசிகள் திணைக்களத்தினர் குறித்த பகுதிக்கு சென்று மேற்கொண்ட ஆய்வில் பறவைகள் உயிரிழந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

எனினும், இந்த சம்பவத்திற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை. குறித்த பகுதியில் பயிர்களுக்கு தெளிக்கப்பட்ட பூச்சிக்கொல்லி காரணமாக இவ்வாறு பறவைகள் உயிரிழந்திருக்கலாம் என பிரதேச விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

நெல் குருவி உள்ளிட்ட பல்வேறு வகையான பறவைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Comments are closed.