பலங்கொட பகுதியில் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் நண்பனுக்காக பரீட்சை எழுத வந்த இளைஞனுக்கு ஏற்பட்ட நிலை!!

பலங்கொட பகுதியில் க.பொ.த சாதாரண தர பரீட்சையின் பரீட்ச்சார்த்தி ஒருவருக்கு பதிலாக பரீட்சை எழுத முற்பட்ட வேறு ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ரஷ்ய மொழி பரீட்சையில் நண்பருக்காக முன்னின்றமை தொடர்பில் இவ்வாறு 21 வயதுடைய இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

எனினும் முன்னரும் இது போன்று பரீட்சை எழுத முற்பட்ட நால்வர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.