பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்

நாட்டில் சில பகுதிகளில் இன்றைய தினம் 100 மில்லிமீற்றர் வரையில் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அத்துடன் சில பகுதிகளில் மணித்தியாலத்துக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹின் குறிப்பிட்டார்.

அத்துடன் கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக ஆறுகளின் நீர் மட்டம் அதிகரித்துள்ளளதாகவும் அதனை அண்டியுள்ள மக்களை அவதானமாக செயற்படுமாறும் நீர்ப்பாசன திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதம பொறியியலாளர் செல்வராஜா ஹேமகாந்த் தெரிவித்தார்.

இதேவேளை, வெள்ளம் காரணமாக இரத்தினப்புரி – பாணந்துறை, இரத்தினப்புரி – எலபாத்த, கிரியெல்ல – இடங்கொட, கலவானை – மத்துகம, களுத்துறை – அகலவத்தை, புளத்சிங்கள – பரகொட ஆகிய வீதிகளில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

Comments are closed.